செய்திகள்

தீபிகா படுகோனை திருமணம் செய்ய ஆசை: பிரிட்டிஷ் நகைச்சுவை நடிகர் ரஸ்ஸல்

அண்மையின் பெங்களூரில் மத்திய அரசின் சிரிப்பு விழா நிகழ்ச்சி (2015) நடைபெற்றபோது அதில் பிரிட்டிஷ் நகைச்சுவை நடிகர் ரஸ்ஸல் பிராண்ட்டும் பங்குபற்றி அசத்தினார். 40 வயதான பிரிட்டிஷ் நகைச்சுவையாளர் ரஸ்ஸல் பிராண்ட் ஒரு சந்தர்ப்பத்தில் இந்தி நடிகை தீபிகா படுகோனை காதலித்து திருமணம் செய்து கொள்ள ஆசைபடுவதாகக் கூறினார். நான் இந்தியாவில் இருந்தால் அவரை நிச்சயம் காதலித்து திருமணம் செய்து கொள்வேன் ,என்று ரஸ்ஸல் கூறியதைக் கேட்டு அங்கு வந்திருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

தொடர்ந்து ” இன்று இரவுக்குள் நான் கைது செய்யப்படவில்லை என்றால் நான் நிச்சயாமாக தீபிகாவைப் பார்ப்பேன். எவரிடமாவது தீபிகாவின் தொலைபேசி எண் இருந்தால் கொடுத்துதவுங்கள் இன்று மாலைக்குள் நான் அவருக்கு போன் செய்து பேசுகிறேன்” என்று அவர் கூறினார்.

Deepika

ரஸ்ஸல் 2010 ம் ஆண்டு இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கேட்டி பெரி என்றப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால் இந்திப் படங்களை விடவும் இந்த திருமணத்தின் ஆயுள் மிகக் குறைவாக இருந்ததாக சிரித்துக் கொண்டே மற்றவர்களிடம் சொல்லி இருக்கிறார் ரஸ்ஸல் பிராண்ட். இந்த சிரிப்பு விழாவானது மூன்று நாட்கள் இந்தியாவில் நடைபெற்றது, ஜூன் 26 டெல்லியிலும், ஜூன் 27 பெங்களூரிலும் , ஜூன் 28ல் இறுதியாக மும்பையிலும் நடைபெற்றன.