செய்திகள்

தீப்பற்றிய மின் மாற்றிகளை ஜப்பான் நிபுணர்கள் ஆய்வு

தீப்பற்றிய மின்மாற்றிகள் இரண்டையும் ஜப்பான் நிபுணர்கள் இன்று முற்பகல் ஆய்வுக்குட்படுத்தியுள்ளனர்.

பியகம மற்றும் கொடுகொட ஓபாத உப மின் நிலையத்தில் அமைந்துள்ள மின்மாற்றிகளை ஜப்பான் நிபுணர்கள் ஆய்விக்குட்படுத்தியுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் அனுர விஜேபால தெரிவித்தார்.

குறித்த மின்மாற்றியினை தயாரித்த ஜப்பான் நிறுவன நிபுணர்களே இதனை சோதனைக்குட்பத்தியுள்ளனர்.

இதேவேளை பியகமவில் தீப்பற்றிய உப மின்நிலையத்திற்கு பதிலாக புதிய மின்மாற்றியொன்றை பொருத்தும் நடவடிக்கை இன்று மாலைக்குள் நிறைவடையவுள்ளதாக அனுர விஜேபால தெரிவித்தார்.

கொட்டுகொட ஓபாத உப மின் நிலையத்தின் மின் மாற்றி தீப்பற்றியதால் பாதிக்கப்பட்ட மின் கடத்தும் செயற்பாட்டை மாற்று வழியினூடாக முன்னெடுக்க நடவடிக்கையெடுத்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் கூறியுள்ளார்.

n10