செய்திகள்

தீயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய வீடுகளை கட்டிக்கொடுக்க அடிக்கல் நாட்டி வைப்பு

மஸ்கெலியா – பிரவுண்ஸ்வீக் தோட்டத்தில் தீயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய வீடுகளை கட்டிக்கொடுக்க 23.04.2016 அன்று மலைநாட்டு புதிய கிராமம் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பி.திகாம்பரம் அடிக்கல் நாட்டி வைத்தார்.

மலைநாட்டு புதிய கிராமம் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் கீழ் மேற்படி தீயினால் பாதிக்கப்பட்ட 25 குடும்பங்களுக்கு குடியிருப்புகள் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.

குறித்த ஒரு வீட்டிற்கு 6.5 இலட்சம் ரூபா செலவிடப்படுகின்றது. இந்த நிதி உதவியை மலைநாட்டு புதிய கிராமம் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு வழங்குகின்றது.

அத்தோடு ஒரு வீட்டில் 2 அறைகள், விராந்தை, குளியலறை மற்றும் மலசலகூடம் என அமைக்கப்படவுள்ளன. ஒவ்வொரு வீடும் தனித் தனி வீடுகளாக கட்டப்படுகின்றமை குறிப்பிடதக்கது.

இந்நிகழ்வின் போது அமைச்சர் உட்பட நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜ் மற்றும் மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன், மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் வீ.புத்திரசிகாமணி உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

n10