செய்திகள்

தீர்மானம் “அனைவருக்குமான ஒரு பெரு வெற்றி” : தமிழ் தேசிய மக்கள் முன்னணி புகழாரம்

வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள இன அழிப்பு தீர்மானத்தினை வரவேற்றுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி இது அனைவருக்குமான ஒரு வெற்றி என்று தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் பத்திரிகை சங்கத்தில் இன்று மாலை நடத்திய செயாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இவ்வாறு தெரிவித்த கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இந்த தீர்மானத்தினை முழுமையாக ஆதரிப்பதாகவும் இதனை நிறைவேற்றியமைக்காக முதலமைச்கார் சி. விக்னேஸ்வரனை பெரிதும் பாராட்டுவதாகவும் கூறினார்.

மாகாண சபை அமைப்பு முறைமை தமிழ் இனப் பிரச்சினை தீர்வுக்கு ஒரு ஆரம்பப் புள்ளியாகவேனும் அமையாது என்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அன்றுதொட்ட நிலைப்பாட்டினை வலியுறுத்திய அவர் அனாலும் அடக்குமுறைகளுக்குள்ளும் இத்தகைய ஒரு தீர்மானத்தினை முழுமையாக பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் தீர்வினை ஒற்றை ஆட்சிக்குள் முடக்குவதற்கு எத்தனிக்கும் சக்திகளுக்கு இந்த தீர்மானம் ஒரு பெரும் பின்னடைவு என்றும் அவர் கூறினார்.