செய்திகள்

தீர்வு இன்றேல் சாகும் வரை உண்ணாவிரதம்: கிளிநொச்சி போராட்டத்தில் எச்சரிக்கை

கிளிநொச்சி கந்தசாமி கோவிலுக்கு முன்பாக காணாமல் போன உறவுகளும் சிறையில் உள்ள அரசியல் கைதிகளின் உறவுகளும் இன்று முன்னெடுத்த அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் பெருந்தொகையானவர்கள் கலந்துகொண்டனர்.

காலை ஆரம்பமான இந்தப் போராட்டம் மாலை 2.00 மணியளவில் முடிவுக்கு வந்தது. அரசாங்கம் இந்தப் பிரச்சினைக்கு முடிவைக் கொண்டுவராவிட்டால் தாம் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கப்போவதாகவும் உண்ணாவிரதமிருந்த தாய்மார் அறிவித்தனர்.

கிறிஸ்தவ மதகுரு. துரைரட்ணம் கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் மதகுரு உள்ளிட்டோர் உண்ணா விரதம் இருந்த உறவுகளுக்கு பழச்சாறு வழங்கி உண்ணா விரதத்தை முடித்துவைத்தனர்.