செய்திகள்

தீவிரமாக பரவும் கண்நோய் : அவதானமாக இருக்குமாறு வைத்தியர்கள் கோரிக்கை

நாட்டில் தற்போது ஒருவித கண் நோய் தீவிரமாக பரவி வருவதாகவும் இதுதொடர்பாக அவதானமாக இருக்குமாறும்  சுகாதார தரப்பினர் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கண்கள் சிவத்தல், கண்களில் அரிப்பு, கண்களில் கண்ணீர் மற்றும் கபம் வடிதல் ஆகியன இந்த நோயின் அறிகுறிகளாகும்.  சில சந்தர்ப்பங்களில் கண் இமைக்கு அருகில் வீக்கம் ஏற்படுதல் அல்லது கண்ணீருடன் இரத்தக்கசிவு போன்ற அறிகுறிகளும் ஏற்படலாம் என வைத்தியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இவ்வாறாக கண் நோய் தொற்றுக்கு இலக்காகியிருந்தால் உடனடியாக தகுதியான வைத்தியர் ஒருவரை நாடி உரிய சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் வைத்தியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..