செய்திகள்

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார் பிரிட்டிஸ் பிரதமர் பொரிஸ் ஜோன்சன்

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. உலகின் 202 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தாலும் வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.உலகம் முழுவதும் 13 லட்சத்து 30 ஆயிரத்து 569 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் இதுவரை 73 ஆயிரத்து 893 பேர் உயிரிழந்துள்ளனர்.

இங்கிலாந்து நாட்டிலும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. அந்நாட்டில் இதுவரை 51 ஆயிரத்து 608 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 5 ஆயிரத்து 373 பேர் பலியாகியுள்ளனர்.இதற்கிடையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும் (வயது 55) கொரோனா பரவியிருந்தது கடந்த மாதம் உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து அவர் தன்னைத்தானே 10 நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொண்டார். ஆனால், வைரஸ் தொற்றின் தாக்கம் குறையாததால் அவர் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள போரிஸ் ஜான்சனின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் எற்படாமல் தற்போது அவரது உடல் நிலை மோசமடைந்து வருகிறது. இதனால், தற்போது அவர் சாதாரண வார்டில் இருந்து தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.இதேவேளை “இன்று பிற்பகலில், பிரதமரின் நிலை மோசமடைந்துள்ளதனை அடுத்து, அவரது மருத்துவக் குழுவின் ஆலோசனையின் பேரில், அவர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். நாட்டின் முதன்மைச் செயலாளராக இருக்கும் வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் (Foreign Secretary Dominic Raab), தனக்கு பதிலாக கடமைகளை மேற்கொள்வார் என பிரதமர் கேட்டுக்கொண்டார்” என டவுனிங் ஸ்றீற் 10 இன் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அத்துடன் “பிரதமர் சிறந்த கவனிப்புக்கு உட்பட்டுள்ளார், அனைத்து தேசிய சுகாதார சேவை ஊழியர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்குk; நன்றி.” எனவும் செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டள்ளார்.(15)