செய்திகள்

துனிசியாவின் வெற்றிகரமான அரசியல் மாற்றத்திற்கு சவால் விடும் இஸ்லாமிய தீவிரவாதம்

அராபிய உலகில் மதச்சார்பின்மைக்கான மிகச்சிறந்த உதாரணமாக கருதப்பட்ட துனிசியா,2011 மக்கள் எழுச்சியில் நீண்ட கால ஆட்சியாளர் பென்அலி பதவிநீக்கப்பட்டதை தொடர்ந்து, இஸ்லாமிய தீவிரவாதத்தின் ஆபத்தான வளர்ச்சியை எதிர்கொண்டுள்ளது
தலைநகர் துனிசில் உள்ள பிரபலமான பார்டோ அருங்காட்சியகம் மீது புதன்கிழமை மேற்கொள்ளப்ட்ட தாக்குதலில் 20ற்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டனர். 2011 மக்கள் எழுச்சிக்கு பின்னர் இடம்பெற்ற மோசமான தாக்குதல் இதுவென தெரிவிக்கப்படுகின்றது.

26CDD4F100000578-3002147-image-a-40_1426778573691

இதுவரை எந்த அமைப்பும் இந்த தாக்குதலுக்கு உரிமை கோரத போதிலும்,அருகில் லிபியாவில் காலூன்றியுள்ள ஐஎஸ் தீவிரவாதிகளே இந்த தாக்குதலுக்கு காரணமாகயிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிரியாவிலும்,ஈராக்கிலும் உள்ள ஐஎஸ் அமைப்பினருடன் இணைந்து போராடுவதற்காக தனது பிரஜைகள் 3000 பேர் அங்கு சென்றுள்ளதாக துனிசியா தெரிவிக்கின்றது. இந்த புள்ளிவிபரங்கள் உண்மையானால் இந்த நாட்டிலிருந்தே அதிகளவானவர்கள் போராடச்சென்றுள்ளனர் என கருதலாம்.
இவர்களில் சிலர் மீண்டும் தமது நாட்டிற்கு திரும்பிவந்துள்ளனர்.இதன் காரணமாக துனிசியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது.
தீவிரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கையெடுக்கப்போவதாக தெரிவித்துவரும் துனிசியாவின் மதச்சார்பற்ற அரசாங்கத்திற்கும் இந்த தாக்குதல் ஓரு பின்னடைவாகும்,
அல்ஜீரியாவின் எல்லையில் செயற்படும் அல்ஹைடா சார்பு அமைப்பின் அச்சுறுத்தலையும் துனிசியா எதிர்கொண்டுள்ளது.குறிப்பிட்ட அமைப்பு துனிசியாவின் மலைபகுதிகளில் இராணுவத்தினருக்கு எதிரான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.2014 யூலை மாதம் இரு வீதிச்சாவடிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 14 படையினர் கொல்லப்பட்டனர்.
1956 இல் பிரான்சிலிருந்து சுதந்திரம்பெற்ற பின்னர் அந்த நாட்டு இராணுவம் சந்தித்த அதிகளவான உயிரிழப்பு இதுவென தெரிவிக்கப்பட்டது.2012 முதல் பயங்கரவாதத்திற்கு எதிராக அந்த நாட்டு இராணுவம் நடவடிக்கைகளை மேற்கொண்டபோதிலும் இந்த தாக்குதல்கள் இடம்பெற்றிருந்தன.துனிசியா இராணுவம் மிகச்சிறியது என்பது குறிப்பிடத்தக்கது.

அன்சர்- அல்- சரியா என்ற தீவிரவாத அமைப்பே துனிசியாவிற்குள் செயற்படும் அமைப்புகளில் முக்கியமானது.2012 செப்டம்பரில் துனிசியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தை தாக்கியதாக இந்த அமைப்பின் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இந்த அமைப்பின் தலைவரை 2011 மக்கள் எழுச்சியின் பின்னர் துனிசியா நல்லெண்ணத்தை ஊக்குவிப்பதற்காக விடுவித்திருந்தது.26C5D55100000578-3002147-image-a-18_1426758088344

ஆனால் இது எதிர்மாறன விளைவுகளை ஏற்படுத்தியிருந்தது,அவர் துனிசியாவிலும், லிபியாவிலும் முக்கிய தீவிரவாதியாக மாறினார், பயங்கரவாதத்தின் கறுப்புபெட்டி என அழைக்கப்பட்டார்.
எனினும் கடந்த வாரம் அவர் லிபியாவில் கொல்லப்பட்டார்.அந்த படுகொலைக்கு பழிவாங்குவதற்hகாகவே அருங்காட்சியகத்தின் மீதான தாக்குதல் இடம்பெற்றதாக அதிகாரிகள் சந்தேககின்றனர்.
குறிப்பிட்ட அமைப்பு துனிசியாவில் வறுமை நிறைந்த பகுதிகளில் தனது மனிதாபிமான பணிகள் மூலமாக மக்கள் ஆதரவை கட்டியெழுப்பியுள்ளது.
இந்த அமைப்பும் ஐஎஸ் உடனான அதன் தொடர்பும் 2011 மல்லிகை புரட்சிக்கு பின்னர் துனிசியா சந்தித்துள்ள வெற்றிகரமான அரசியல் மாற்றத்திற்கு ஊறுவிளைவிக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.