செய்திகள்

துனிசியாவில் அருங்காட்சியகத்தில் துப்பாக்கி பிரயோகம் 17 வெளிநாட்டவர்கள் பலி

துனிசியாவின் தலைநகரில் அந்த நாட்டின் பாராளுமன்றத்திற்கு அருகில் உள்ள அருங்காட்சியகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிபிரயோகத்தில் 17 வெளிநாட்டு பிரஜைகள் கொல்லப்பட்டுள்ளனர்.
பேருந்துகளிலிருந்து இறங்கிக்கொண்டிருந்த வெளிநாட்டவாகள் மீது இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கி பிரயேகத்தை மேற்கொண்டு பதினேழுபேரை படுகொலைசெய்ததுடன் மேலும் பலரை பணயக்கைதிகளாக பிடித்துச்சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன் பின்னர் படையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் தாக்குதலை மேற்கொண்ட இருவரும் படைவீரர் ஓருவரும் பலியாகியுள்ளதாகவும் பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தலைநகரத்தின் மத்தியில் அருகில் அமைந்துள்ள பார்டோ அருங்காட்சிசாலையிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
மேலும் பாராளுமன்றத்தில் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் குறித்த விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.உடனடியாக நாடாளுமன்றத்திலிருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
; பிரிட்டன் இத்தாலி மற்றும் பிரான்ஸ்,ஸ்பெயின் நாட்டவர்கள் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.
குறிப்பிட்ட தாக்குதலைதொடர்ந்து வெளிநாட்டவர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு தப்பியோடுவதை தொலைக்காட்சிகள் காண்பித்துள்ளன.
துனிசியாவில் வெளிநாட்டுப்பயணிகளை கவரும் முக்கிய இடமாக அருங்காட்சியகம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.அந்த நாட்டிற்கு அதிகளவு வருமானத்தை ஈட்டித்தரும் துறையாக உல்லாசப்பயணத்துறை விளங்குகின்றது.
2002 இல் துனிசியாவில் அல்ஹைடா மேற்கொண்ட குண்டு தாக்குதலில் 19 ஜேர்மன் பிரஜைகள் கொல்லப்பட்டனர்