செய்திகள்

துனீஷியா கடற்கரை கொலை: காயம் அடைந்தவர்களை தேடிச்சென்று சுட்டுக்கொன்ற கொலையாளி

துனீஷியாவின் கடற்கரையில் சில தினங்களுக்கு முன்னர் வெளிநாட்டு உல்லாசப்பயணிகள் மீது துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்திய பயங்கரவாதி அங்கு துனீஷிய பொலிசார் வருவதற்கு 20 நிமிடங்கள் எடுத்ததால், சாவகாசமாக காயப்பட்டவர்களை அடையாளம் கண்டு அவர்களை சுட்டுக்கொன்றதாக தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

செபிடின் ரெசுகி என்று அடையாளம் காணப்பட்டுள்ள 23 வயது மாணவனான இந்த பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 38 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 30 பேர் பிரித்தானியர்கள். துனீஷிய பொலிசார் சம்பவ இடத்துக்கு உடனடியாக வந்திருந்தால் காயம் அடைந்த 17 பேர் இன்று உயிருடன் இருந்திருப்பார் என்று துனீஷிய பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பகல் 11.45 மணிக்கு ஏ . கே .47 துப்பாக்கியை மறைத்துக்கொண்டு இம்பீரியல் மார்க்கப என்ற ஹோட்டலுக்கு வந்த செபிடின் ரெசுகி 11. 58 மணிக்கு அங்கிருந்த நீச்சல் பகுதிக்கு சென்று வெளிநாட்டு உல்லாசப்பயணிகளை குறிவைத்து சரமாரியாக துப்பாக்கியால் சுடத் தொடங்கியுளார்.

பின்னர் 12.03 மணிக்கு ஹோட்டலின் நிர்வாக அலகுக்கு சென்று அங்கும் துப்பாக்கி பிரயோகம் செய்ததுடன் கைக்குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தியுள்ளான். பின்னர் மீண்டும் கடற்கரைக்கு சென்ற அவன், காயம் அடைந்து ஓடுவதற்கு முயற்சித்துக் கொண்டிருந்தவர்களை அடையாளம் கண்டு சுட்டுக்கொன்றுள்ளான்.

கடற்கரை பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த பாதுகாவலர்கள் அவனை ஹோட்டலுக்கு வெளியே விரட்டி அருகில் இருந்த வீதி ஒன்றில் 12. 32 மணிக்கு சுட்டுக்கொல்லும் வரை பொலிசார் வரவில்லை என்றும் இதனால் அவன் சுதந்திரமாக நடமாடி உல்லாசப்பயணிகளை சுட்டுக்கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

 [youtube url=”https://www.youtube.com/watch?v=KiGkFmbHwH8″ width=”500″ height=”300″]

[youtube url=”https://www.youtube.com/watch?v=52lj5YhbjQo” width=”500″ height=”300″]

[youtube url=”https://www.youtube.com/watch?v=oGZVQg78fE0″ width=”500″ height=”300″]