செய்திகள்

துபாய் வங்கியில் 500 மில்லியன் டாலரை மீளப்பெற்ற எம்.பி. யார்? ஜே.வி.பி. கேள்வி

துபாய் வங்கியில் 500 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை மீளப்பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் யார் என்பதை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் என ஜே.வி.பி. கோரிக்கை விடுத்தது.

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரட்ன துபாய் வங்கியொன்றில் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் 500 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை மீளப்பெற்றதாகவும், இலங்கையில் முன்னணி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் துபாய் வங்கியில் 300 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை வைப்பிலிட்டதாகக் கூறி யிருந்ததை சுட்டிக் காட்டிய ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி, யார் அந்த பாராளுமன்ற உறுப்பினர் என்பது சபையில் பகிரங்கப்படுத்த வேண்டும் என்றார்.

யார் அந்த எம்.பி. என்று கூறாவிட்டால் சபையில் உள்ள சகல எம்.பிக்களையும் சந்தேகக் கண்ணோடு பார்க்க வேண்டிய சூழல் ஏற்படும் என்றும் கூறினார். கடந்த அரசின் செலவீனங்கள் வருமானங்கள் மற்றும் அபிவிருத்தி திட்டங்களை முன் னெடுத்து செல்வது தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.

சாதாரண அரச ஊழியர்கள் மற்றும் பொலிஸார் மோட்டார் சைக்கிளை பெற்றுக் கொள்வதற்காக பெரும் பாடுபட்டு 20,000 ரூபாவை வங்கியில் வைப்பிவிட்டு விட்டு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறான நிலையை சிறிய இலங்கைத் தீவில் இவ்வளவு பெருந் தொகை பணத்தை டுபாய் வங்கியில் கொண்டிருக்கும் நபர் யார் என்பது சபைக்குத் தெரியப்படுத்தப்படு வது அவசியம். அரசாங்கம் இதனை பகிரங்கப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.