செய்திகள்

துப்பாக்கியுடன் வநத இராணுவ வீரர்: மஹிந்­தவின் பாது­காப்புப் பிரிவு பிர­தா­னி­யிடம் விசா­ரணை

அங்குணுகொலபெலஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் ஜனாதிபதி மைத் திரிபால சிறிசேனவை துப்பாக்கியுடன் நெருங்கிய இராணுவ வீரர் விவகாரத்தில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் பாது­காப்புப் பிரிவு பிர­தானி கொல்மஹேந்­திர பெர்னாண்­டோ­விடம் விசா ரணை நடத்தப்பட்டுள்ளது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் கூட்­டத்­திற்கு துப்­பாக்­கி­யுடன் சென்ற இரா­ணுவ கோப்ரல் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் பாது­காப்பு பிரிவு உறுப்­பினர் என்றும் அவர் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜ­ப­க்ஷவின் பாது­காப்­புக்­காக அங்கு சென்­ற­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இது குறித்து தெளி­வு­ப­டுத்தி முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று ஊடகங்களுக்கு விளக்க அறிக்கை ஒன்றை விடுத் திருந்தார். இந்நிலையிலேயே இந்த விவகாரம் தொடர்பில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் பாது­காப்பு பிரிவு பிர­தானி கொல் மஹேந்­திர பெனாண்­டோ விசாரிக்கப்பட்டுள்ளார்.