செய்திகள்

துமிந்த சில்வா விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்

பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிடம் பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளதா பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் பொது வேட்பாளராக போட்டியிட்ட தற்போதைய ஜனாதிபதியின் கொலனாவை பகுதியில் நடைபெறவிருந்த கூட்ட மேடை மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பாகவே அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பொலிஸ் விசேட விசாரணை பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துவரும் நிலையிலேயே அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.