செய்திகள்

துர்முகி புதுவருடம் அனைவரினதும் வாழ்விலும் மகிழ்ச்சியை ஏற்படுத்த வேண்டும்

பிறக்கவுள்ள  துர்முகி புதுவருடம் அனைவரினதும் வாழ்விலும் மகிழ்ச்சியை ஏற்படுத்த வேண்டுமெனத் தமிழ் – சிங்கள புதுவருடத்தினை முன்னிட்டு தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலையக பதிய கிராமங்கள் இ உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சருமான பி.திகாம்பரம் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

 அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:

 இலங்கையில் வாழுகின்ற தமிழ் – சிங்கள மக்களும் உலகெங்கிலும் வாழுகின்ற இந்து மக்களும் சித்திரைப் புதுவருடத்தினை ஒவ்வொரு வருடமும் கொண்டாடி மகிழ்கின்றனர். இலங்கையைப் பொறுத்த வரையில் தமிழ் – சிங்கள மக்களின் ஒற்றுமைக்கு வலுச் சேர்க்கும் தேசிய ஒற்றுமை பண்டிகையாக தமிழ் – சிங்கள புதுவருடப் பண்டிகை கருதப்படுகின்றது. தமிழ் இசிங்கள மக்கள் தமது பாராம்பரிய விழுமியங்களுக்குக் கௌரவம் செலுத்தும் வகையில் இந்தச் சித்திரைப் புதுவருடத்தினைக் கொண்டாடுகின்றனர்.

 அத்துடன் பிறந்திருக்கின்ற இந்தப் புது வருடத்தில் காலமறிந்து செய்யப்படுகின்ற அனைத்தச் செயற்பாடுகளும் ஒவ்வொருவரின் வாழ்விலும் சுபீட்சம் ஏற்பட வேண்டும். இறைவழிபாடுஇ தானதர்மம்இ ஆசிபெறுதல் என்பன இந்தப்பண்டிகையின் உயரிய விழுமியங்கள் என்பதால் இந்த விழுமியப்பண்புகளை அனைவரும் வருடம் முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும். இன்றைய நல்லாட்சியில் மலையகத் தமிழ் மக்கள் பல்வேறு நன்மைகளைப் பெற்று வருகின்றனர்.

 இந்தப் புதுவருடத்தில் மலையகத் தோட்டப்பகுதிகளில் தனிவீட்டுத்திட்டத்தினை முனைப்புடன் முன்னெடுக்கக்கூடிய காலம் கனிந்துள்ளது. ஐந்தாண்டு திட்டத்தின் ஊடாக பாரிய அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கான சாத்தியமும் ஏற்பட்டுள்ளது. துர்முகி புதுவருடத்தில் எமது நாட்டில் வாழுகின்ற சகல மக்கள் மத்தியிலும் சாந்தியும் சமாதானமும் மலர வாழ்த்துகின்றேன்.

n10