செய்திகள்

துறைமுக அதிகார சபையில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆராய குழு!

துறைமுக அதிகாரசபையில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில் ஆராய ஜனாதிபதி சட்டத்தரணி நலின் லத்துவஹெட்டி உள்ளிட்ட மூவர் அடங்கிய குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆட்சிக் காலத்தில் துறைமுக அதிகாரசபைத் தலைவராக பேராசிரியர் பிரியான் பந்து விக்ரம கடமையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.