செய்திகள்

துறைமுக ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில்

துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவையும் மற்றும் துறைமுகங்கள் அதிகாரசபையின் தலைவரையும் பதவி விலக்குமாறு கோரி துறைமுக ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.
துறைமுகத்தின் ஒன்றிணைந்த தொழிற் சங்கங்களின் கூட்டணியே இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றது.
தமது பிரச்சினைகளுக்கு தீர்வுகள் காணப்பட வேண்டுமெனவும் ஆனால் அமைச்சரோ , அதிகாரிகளோ தீர்வு காண நடவடிக்கையெடுப்பதில்லையெனவும்  இதனால் இந்த விடயத்தில் ஜனாதிபதியும் பிரதமரும் தலையிட வேண்டுமெனவும் கோரி அவர்கள் குறித்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
நேற்று முதல் இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
n10