செய்திகள்

துறைமுக நகரத்துக்குப் பச்சைக்கொடி

துறைமுக நகரத்திட்டத்தினை ஆரம்பிப்பது தொடர்பில் சீன அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும் ஒருமித்த ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாக அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார்.

சீன ஜனாதிபதிக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினருக்குமிடையில் இடம்பெற்ற சந்திப்பினைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் சரத் அமுனுகம மேற்படி தெரிவித்தார்.

‘துறைமுக நகரத் திட்டம் தொடர்பில் பின்பற்றப்படாமலிருந்து சில சில சட்டத் திருத்தங்களை மேற்கொண்டு, விரைவில் துறைமுக நகரத் திட்டத்தினை மேற்கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சீன ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.

இந்த உறுதிமொழியை ஏற்றுக்கொண்ட சீன ஜனாதிபதி, தனது மகிழ்ச்சியினையும் தெரிவித்தார்’ என அவர் மேலும் குறிப்பிட்டார். ‘சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் புனர்வாழ்வுக்காக சீன அரசாங்கம் பாரியளவு அம்பியூலன்ஸ் வண்டிகளை வழங்கவுள்ளது.

அதேபோல், 600 புலமைப்பரிசில்களை இலங்கை மாணவர்களுக்கு வழங்க, சீன அரசாங்கம் முன்வந்திருக்கிறது. பாதுகாப்பு தொடர்பான பயிற்சிகளை இலங்கைப் படையினருக்கு வழங்குவதற்கும் சீன அரசாங்கம் முன்வந்திருக்கிறது’ எனவும் அமைச்சர் சரத் அமுனுகம மேலும் தெரிவித்தார்.

n10