செய்திகள்

துறைமுக நகரப் பணிகள் அடுத்த மாதம் மீள ஆரம்பம்

கொழும்புத் துறைமுக நகரத் திட்டப் பணிகள் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என்று தேசிய கொள்கைகள் மற்றும், பொருளாதார விவகார அமைச்சர் நிரோசன் பெரேரா தெரிவித்துள்ளார்.

சீனப் பயணத்தின் போது  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எல்லா உடன்பாடுகளையும் இறுதி செய்துள்ளார்.

எனவே மே மாதம் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.  திட்டப் பணிகளை அடுத்த மாதம் ஆரம்பிப்பதற்கான எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

n10