செய்திகள்

துறைமுக நகர் திட்டத்திற்கு எதிராக மற்றுமொரு அடிப்படை உரிமைமீறல் மனு

கொழும்பு துறைமுக நகர திட்டத்துக்கு எதிராக மற்றொரு அடிப்படை உரிமைகள் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அகில இலங்கை மீனவ சமூக தொழிற்சங்கமொன்றே நேற்று உச்ச நீதிமன்றத்தில் மேற்படி அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்துள்ளது.

கொழும்பு துறைமுக நகர நிர்மாணிப்புக்காக எந்தவித சாத்தியக் கூற்றறிக்கையையும் கவனத்தில் கொள்ளாது துறைமுக நகரத் திட்டத்துக்காக அரசுக்குரிய காணி வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. சங்கத்தின் தலைவர் அருண ரொஷாந்த பர்னாண்டோ தாக்கல்செய்த மனுவில் பிரதிவாதிகளாக சட்டமா அதிபர், துறைமுக அதிகார சபை, கரையோர பாதுகாப்பு திணைக்களம், கொழும்பு மாநகரசபை, வீதிஅபிவிருத்தி அதிகார சபை, சைனா, கொமினிகேஷன் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனம் என்பன குறிப்பிட்டுள்ளன.

துறைமுக நகரில் 20 ஏக்கர் நிலப்பரப் பொன்றை உருவாக்குவதற்காக நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டுள்ள சீன நிறு வனத்துக்கு எந்தவித கேள்வியும் இன்றி வழங்கப் பட்டுள்ளது என்றும் துறைமுக நகரத்துக்காக ஒதுக்கப்பட்ட பகுதியை நிரப்பும் போது கொழும்பு மற்றும் நீர்கொழும்பு வரையி லான கரையோரப் பகுதிகளில் கடற் றொழிலில் ஈடுபட் டுவரும் சுமார் 30,000 குடும்பங் களின் வாழ்வாதாரம் முற்றாகப் பாதிக்க ப்படுகிறது என்றும்மனுவில் குறிப்பிட் டுள்ளனர்.