செய்திகள்

தூக்கிட்டு தற்கொலை

கொட்டகலை – டிரேட்டன் தோட்டத்தில் ஒரு பிள்ளையின் தந்தை நேற்று  ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

38 வயதான மகாலிங்கம் மகேந்திரகுமார் என்பரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்கொலை செய்து கொண்டதுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என பத்தனை பொலிஸார் தெரிவித்தனா்.

சடலம் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பரிசோதனைகளின் பின் சடலம் உறவினா்களிடம் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.