செய்திகள்

தூக்குத் தண்டனை செயற்படுத்தப்பட வேண்டும்: ஜனாதிபதியிடம் யோசனை முன்வைக்க திட்டம்

நாட்டில் இடம்பெறும் குற்றச் செயல்களை தடுக்க தூக்குத் தண்டனையை செயற்படுத்த வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் யோசனை முன் வைக்கவுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டில் கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றது. கடந்த அரசாங்கத்தில் தூக்கு தண்டனை முறையை செயற்படுத்துவதற்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டிருந்த போதும் அது நிறைவேற்றப்படவில்லை.
இந்நிலையில் இது தொடர்பான யோசனையொன்றை ஜனாதிபதியிடம் முன்வைப்பதற்கு திட்டமிட்டுள்ளோம் அதனை எதிர்வரும் நாட்களில் முன் வைக்க எதிர்பார்த்துள்ளோம். என அமைச்சர் தெரிவித்துள்ளார்.