செய்திகள்

தூக்குத் தண்டனை நாட்டுக்கு வேண்டுமா? இல்லையா?விரைவில் ஜனாதிபதி அறிவிப்பார்

இலங்கையில் தூக்குத்த தண்டணையை செயற்படுத்துவது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரைவில் அறிவிப்பை வெளியிடுவார் என சட்டம் ஒழுங்கு அமைச்சர் ஜோன் அமரத்துங்க தெரிவித்துள்ளார்.
தூக்குத்தண்டனை செயற்படுத்த வேண்டுமா இல்லையா என அபிப்பிராயங்களை முன்வைக்கும் 90 வீதமானவர்கள் வேண்டும் என்றே தெரிவித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவர்ளுக்கு தூக்குத் தண்டனை வழங்க வேண்டுமென்றே அவர்களில் அதிகமானவர்கள் கூறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.