செய்திகள்

தூங்காவனம்: மீண்டும் கமலின் முத்தக் காட்சிகள்

தூங்கா வனம் படத்தின் முதல் பார்வை போஸ்டர்களை ஹைதராபாத்தில் வெளியிட்டு இருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். இதில் ஒரு போஸ்டரில் கமல்ஹாசன், நாயகிக்கு உதட்டு முத்தம் கொடுப்பது போல உள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் இன்று முதல் ஹைதராபாத்தில் தொடங்க இருப்பதால் அங்கு உள்ள தெலுங்கு பத்திரிக்கையாளர்களை சந்தித்து அவர்கள்முன்னிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் கமல்.

முதல் லுக் வித்தியாசமாக இருக்கிறது. ஆக்ஷன் மற்றும் ரொமான்ஸ் என இரு வித கலவையை இந்த போஸ்டர்களில் வெளிப்படுத்தியுள்ளார் கமல். ஒரு போஸ்டரில் நாயகிக்கு மிக நெருக்கமாக நின்று முகத்துடன் முகம் பொருத்தி முத்தம் பதிப்பது போல காட்சி உள்ளது.