செய்திகள்

தூதுவர் பதவி வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்! வெளிவிவகார அமைச்சு

வெளிநாட்டு தூதுவர் பதவிகளில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக வெளி விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

பாராளுமன்றத்தின் உயர் அதிகாரங்களை கொண்ட செயற்குழுவுக்கு அந்த பதவிகளுக்கு நியமிக்க வேண்டியவர்கள் தொடர்பான தகவல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதன் அனுமதி கிடைத்ததும் விரைவில் அவர்களை நியமிக்க நடவடிக்கையெடுக்கப்படுமென அமைச்சு தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் தூதரகங்களில் பணியாற்றிய தூதுவர்கள் பலர் மீண்டும் இலங்கைக்கு அழைக்கப்பட்டதால் அந்த பதவிகளில் வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.