செய்திகள்

தூய நீருக்கான விசேட செயலணியின் செயற்பாடுகள் குறித்து பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றியம் கடும் அதிருப்தி

யாழ்ப்பாணத்தில் நிலத்தடி நீரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்குவதற்கும் நிலத்தடி நீரைப் பாதுகாப்பதற்குமாக வடக்கு முதலமைச்சர் தலைமையில் உருவாக்கப்பட்ட தூய நீருக்கான விசேட செயலணியின் செயற்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்று தூய நீருக்கான பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றியம் குற்றம் சாட்டியிருக்கிறது.

இந்த விசேட செயலணியானது ஒரு வார காலத்திற்குள் இதற்கு ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை எடுக்காதவிடத்து அந்தச் செயலணியிலிருந்து உடனடியாக விலகுவதுடன் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களையும் இணைத்து மீண்டும் மாபெரும் போராட்டங்களை தொடர்ச்சியாக நடத்தப் போவதாகவும் ய நீருக்கான பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றியம் அறிவித்திருக்கிறது.

தூய நீருக்கான பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்துள்ளதாவது:

சுன்னாகம் நொர்தேன் பவர் மின் உற்பத்தி நிலையத்திலிருந்து வெளியேறும் கழிவு ஒயிலினால் வலி வடக்கு, வலி தெற்கு, வலி தென்மேற்கு ஆகிய பிரதேச சபைக்குட்பட்ட பகுதி மக்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர். அத்துடன் இந்தப் பாதிப்பு யாழ்ப்பாணத்தின் ஏனைய பிரதேசங்களிற்கும் செல்வதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இத்தகைய பிரச்சனைகளைத் தடுத்து நிறுத்தி பாதிக்கப்பப்பட்ட மக்களுக்கு உதவி வழங்க வேண்டுமெனக் கோரி பிரதேச மக்களும் பொது அமைப்புக்களும் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்திருந்ததுடன் சம்மந்தப்பட்ட பல்வேறு தரப்பினர்களுடனும் பேச்சுவார்த்தைகளையும் நடத்தியிருந்தனர்.

இந்நிலையில் இந்தப் பிரச்சனைகளைத் தீர்து வைத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்கும் வகையில் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்கினேஸ்வரன் தலைமையில் தூய நீருக்கான விசேட செயலணியொன்று கடந்த சில மாதங்களிற்கு முன்னர் உருவாக்கப்பட்டிருந்தது.

ஆயினும் இந்தச் செயலணியானது மக்களைப் பாதுகாக்கும் வகையில் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுப்பதாகத் தெரிவித்திருந்த பேகாதிலும் இதுவரையில் ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. இது தொடர்பில் நாம் ஏற்கனவே மேற்படி செயலணியிற்கும் தெரியப்படுத்தியும் இருந்தோம். இந்நிலையில் கடந்த 23 ஆம் திகதி இடம்பெற்ற செயலணயின் கூட்டத்திலும் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதிலோ அல்லது மக்களின் நலன்கள் தொடர்பிலோ எதுவும் கதைக்கப்படவில்லை.

இந்நிலையில் இச் செயலணி தொடர்பில் நாம் பலவற்றைத் தெரியப்படுத்த விரும்புகிறோம். இச் செயலனியின் நிர்வாக கட்டமைப்பின் பிரகாரம் அதிகாரிகள் சமுகமளிக்கவில்லை என்பதுடன் வந்திருந்தவர்கள் தங்களுடைய நிர்வாக பிரச்சனைகளை கதைத்துக்கொண்டிருந்கார்களே தவிர மக்களின் பிரச்சனைகளை ஆராய்வற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அத்துடன் தாங்கள் நீர் தாங்கிவைத்தல், குடிநீர் விநியோகம் போன்றவை பல இடங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இவ் வாரத்திற்குள் பூர்த்தியாகும் எனவும் தெரிவிதார்கள்.

எனினும் நீரின் தரம் பற்றிய நம்பகத் தன்மையை தெளிவுபடுத்தவில்லை. ஆனால் இன்றுவரை வலிகாமம் பகுதி மக்கள் தமக்கு வழங்கப்படும் நீரிலும் ஓயில் கலந்துள்ளதாக தொடர்தும் எமக்கு முறைப்பாடு செய்கின்றார்கள். மேலும் எம்மால் 08.02.2015 சமர்ப்பிக்கப்பட் கோரிக்கைகளுக்கு தகுந்த பதில் தரப்படவில்லை.

எனவே மக்களாகிய நாமும் இது சம்பந்தமான தூய நீருக்கான பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் என்றரீதியில் இதற்கான தகுந்த பதிலை ஒரு கிழமைக்குள் தூய நீருற்கான விசேட செயலணியின் அதிகாரிகளிடம் இருந்து எதிர்பாக்கின்றோம்.

ஆயினுமும் இதற்கு தவறும் பட்சத்தில் இச் செயலனியின் அங்கமாக செயற்பட்டுவரும் பொதுமக்களாகிய எமதுபிரதிநிதித்துவம் முற்றாகமீளப் பெறப்படும் என்பதையும் பிரச்சினைக்கான தீர்வினை எட்டும் பொருட்டான அடுத்தகட்டச் செயல் நகர்வுகள் அதிவிரைவில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதையும் இச் செயலணியின் அதிகாரிகளிடம் வேண்டிக் கொண்டுள்ளோம்.

இவை நடைமுறைப்படுத்தப்படாத பட்சத்தில் மாபெரும் மக்கள் போரட்டம் நடத்தப்படும் என்பதனை மக்களுக்கு தெரிவிப்பதுடன் தங்களின் ஒத்துழைப்பினை தொடர்ச்சியாக வேண்டுகின்றோம். என்றும தூய நீருக்கான பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றியத்தின் மக்கள் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.