செய்திகள்

தென்கிழக்கு ஆசியா கடற்பகுதியில் 1000ற்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் மீட்பு

மியன்மார் மற்றும் பங்களாதேசை சேர்ந்த 1000ற்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் தென்கிழக்கு ஆசியாவின் பல கடற்கரைகளுக்கு படகுகள் மூலமாக வெள்ளிக்கிழமை வந்துசேர்ந்துள்ளனர்.
மியன்மாரிலிருந்து ஒடுக்குமுறை காரணமாக வெளியேறியவர்களும், பங்களாதேசிலிருந்து வறுமை காரணமாக வெளியேறியவர்களுமே இவ்வாறு வந்துசேர்ந்துள்ளனர்.
மூன்று படகுகள் நிறைய குடியேற்றவாசிகள் களைத்து பலவீனமான நிலையில் இந்தோனேசியாவிற்கு வந்துசேர்ந்துள்ள அதேவேளை தாய்லாந்து கடற்கரையில் படகுகளில் காணப்பட்ட 106 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மலேசியாவிற்கு செல்வதற்கு முயன்றவேளையிலேயே நடுக்கடலில் சிக்குண்டுள்ளனர்.இவர்களை ஏற்றிக்கொண்டு வந்த படகுகளின் மாலுமிகள் தப்பியோடிவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில் ஒரு படகு இந்தோனேசியாவின் அசே பிராந்தியத்தில் மீட்கப்பட்டதாகவும் அதில் 61 குழந்தைகள் மற்றும் 69 பெண்கள் உட்பட 750 ற்கும் மேற்பட்டவர்கள் காணப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.மூழ்கும் தறுவாயிலிருந்த படகை மீனவர்கள் மீட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.இவர்கள் ஓடுக்குமுறையிலிருந்து தப்பிப்பதற்காக மியன்மாரிலிருந்து தப்பியோடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த பகுதியிலிருந்து 25 கிலோமீற்றர் தொலைவில் மியன்மாரின் ரொகிங்யா முஸ்லீம்கள் 47 பேர் களைப்படைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.சுமாத்திராவில் 96 பேரும், மீட்கப்பட்டுள்ளனர்.