செய்திகள்

தென்கொரியாவை அடுத்து தாய்லாந்திலும் பரவும் மெர்ஸ் வைரஸ்

மெர்ஸ் என்ற கொடிய வைரஸ் நோய் தென்கொரியாவை ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த நோய்க்கு இதுவரை 20 பேர் பலியாகியுள்ளனர். ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த நோய் தாய்லாந்திற்கும் பரவியுள்ளது. அங்குள்ள ஒருவருக்கு இந்த நோய் இருப்பதை அந்நாட்டு அரசு உறுதிப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டின் பொது சுகாதாரத்துறை மந்திரி கூறும்போது, ‘‘75 வயது வயதான ஒருவர் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து தாய்லாந்திற்கு வந்தார். அவர் இதய நோய் குறித்த சிகிச்சை மேற்கொண்டார். ஆய்வு சோதனையில் அவருக்கு மெர்ஸ் நோய் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது’’ என்று கூறினார்.

‘பாதிக்கப்பட்ட அந்த முதியவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் அவருடன் வந்த உறவினர்கள், அவர்கள் தங்கியிருந்த ஓட்டலில் வேலை செய்தவர்கள், மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் விமானத்தில் அவர் அருகில் அமர்ந்து பயணம் செய்தவர்கள் என 59 பேரின் உடல்நிலையும் கண்காணிக்கப்படுகிறது’ எனவும் சுகாதாரத்துறை மந்திரி கூறினார்.