செய்திகள்

தென்கொரியா சென்ற விமானத்தின் இறக்கை மீது மின்னல் தாக்குதல்: பயணி எடுத்த படத்தால் பரபரப்பு

சிங்கப்பூரில் இருந்து தென்கொரியாவில் உள்ள சியோல் நகருக்கு போயிங் 777 என்ற விமானம் சென்று கொண்டிருந்தது. நடுவானில் விமானம் பறந்து கொண்டிருக்கும்போது மோசமான வானிலை நிலவியது. அத்துடன் இடி-மின்னல் ஏற்பட்டது. அப்போது விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் போட்டோ தயார் ஆகி கொண்டிருந்தார்.

அந்த சமயம் திடீரென இடி விமானத்தின் அருகில் விழுந்து இறக்கையை தாக்கியது. இதனால் கடுமையான தீப்பொறி கிளம்பியது. இதை அவர் போட்டாவாக எடுத்துள்ளார். இருப்பினும், இந்த மோசமான சம்பவத்தால் விமானம் எந்தவித ஆபத்துமின்றி 10 நிமிடம் கழித்து சியோல் நகரில் பாதுகாப்பாக தரையிறங்கியதாக நம்பப்படுகிறது.

இதுகுறித்து பிரிட்டிஸ் ஏர்லைன் விமானிகளின் ஆசோசியேசன் செய்திதொடர்பாளர் கேப்டன் ஸ்டீவன் டிராபெர் கூறும்போது ‘‘சாதாரண மின்னல் காரணமாக விமானம் பறப்பதில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. எனினும், இடி தாக்கக்கூடிய அளவு நெருக்கமாக பறக்கும் வேலைகளில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விமானிகள் மேற்கொள்வதுண்டு. கடுமையான மழை மற்றும் புயல் தாக்கும் பகுதிகளை ரேடார் மூலம் அறிந்து கொள்ளும் விமானிகள் அவ்வழியாக பறப்பதை தவிர்ப்பது உண்டு’’ என்று கூறினார்.
ஆனால், இந்த சம்பவம் குறித்து தென்கொரியா விமான நிறுவனம் பதில் ஏதும் அளிக்கவில்லை.