செய்திகள்

தென்னாபிரிக்காவின் களத்தடுப்பு திறனுக்கு சச்சின் பாராட்டு

ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள தென்னாபிரிக்கா அணியுடனான போட்டியில் வெல்வதற்கு இந்தியா தனது ஆரம்ப துடுப்பாட்டம் மற்றும் விக்கெட்களிடையே வேகமாக ஓடி ஓட்டங்களை பெறுவது ஆகிய இரு விடயங்களில் கவனம் செலுத்தவேண்டும் என சச்சின்டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
தென்னாபிரிக்கா மிகச்சிறந்த களத்தடுப்பாட்ட திறனை கொண்டுள்ள அணி அதனால் ஓன்று, இரண்டு ஓட்டங்களை தொடர்ச்சியாக ஓடி பெறுவது கடினமான விடயம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தென்னாபிரிக்கா பாக்கிஸ்தானை விட தலைசிறந்த அணி. குறிப்பாக களத்தடுப்பில்,அவர்கள் வேகமாககளத்தடுப்பில் ஈடுபடக்கூடியவர்கள், சிறப்பாக பந்துகளை தொலைவிலிருந்த எறியக்கூடியவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

தென்னாபிரிக்க அணி தலைவர் ஏபிடிவிலியர்சை முழுமையான துடுப்பாட்ட வீரர் என வர்ணித்துள்ள சச்சின், அவர் நினைத்துப்பார்க்க முடியாத திறனை கொண்டவர்,புதிய புதிய விதத்தில் விளையாடுவார், இருபதிற்கு இருபது போட்டிகள் அவரது திறனை அதிகரித்துள்ளன, உலகின் தலைசிறந்த துடுப்பாட்ட வீரர்களில் அவரும் ஓருவர், அவரிடம் பலவீகங்களேயில்லை எனவும்சச்சின் தெரிவித்துள்ளார்.
ஹசிம் அம்லா குறித்தும் புகழ்ந்துள்ள சச்சின், நான் அவரது பெரும் ரசிகன்,அவர் அதிகம் அலட்டிக்கொள்ள மாட்டார், தனது துடுப்பாட்டத்திலேயே கவனம் செலுத்துவார்,அவர் இந்தியாவிற்கு வந்தவேளைகளில் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு சிறப்பாக விளையாடியுள்ளார்,சில வேளைகளில் அவருக்கு எவ்வாறு பந்துவீச வேண்டும் என்பது குறித்து எங்களது பந்துவீச்சாளர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன் ஆனால் அவர் அவர்களை விரக்தியடையச்செய்துவிடுவார். ஏன சச்சின் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் இளம் துடுப்பாட்ட வீரர்கள் குறித்தும் பலத்த நம்பிக்கையை வெளியிட்டுள்ள சச்சின் துடுப்பாட்ட வரிசையை அடிக்கடி மாற்றுவது குறித்து எச்சரிக்கை வெளியிட்டுள்ளார். ரஹானே ரெய்னாவிற்கு முதல் விளையாடவேண்டும், அணி ஆரம்பத்தில் விக்கெட்களை இழந்தால் ரெய்னாவை அனுப்பக்கூடாது,ரஹானேயை அனுப்ப வேண்டும்,ரெய்னா 20ஓவர்களிற்கு பின்னரே மிகவும் ஆபத்தானவர்,என குறிப்பிட்டுள்ளார்.