செய்திகள்

தென்னாபிரிக்காவில் நிறவெறி ஆட்சிக்கால பிரதான கொலையாளி விடுதலை

தென்னாபிரிக்காவின் நிறவெறி ஆட்சிக் காலத்தில் எல்லோரையும் விட மிக மோசமான கொலைகள் மற்றும் சித்திரவதைகளில் ஈடுபட்ட இயுஜீன் டியு கொக் 20 வருட சிறை வாசத்தின்பின்னர் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

தென்னாபிரிக்காவின் கிளர்ச்சித் தடுப்பு பிரிவொன்றுக்கு பொறுப்பாக செயற்ப்பட்ட இவர் நூற்றுக்கணக்கான கறுப்பின செயற்பாட்டளர்களை சித்திரவதை செய்து கொன்றதாக உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னாள் ஒப்புக்கொண்டிருந்தார். கறுப்பின செயற்ப்பாட்டாலார்களை கயிற்றினால் ஒன்றாக கட்டி அவர்களை கொல்லும் அதாரம் எதுவும் கிடைக்காமல் வெடி வைத்து கொன்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இவருக்கு இரு ஆயுட்கால தண்டனையுடன் கூடிய 212 வருட சிறைவாசம் 1996 இல் அளிக்கப்பட்டிருந்தது. இவர் தற்போது புற்று நோய் காரணமாக மெல்ல மெல்ல இறந்து வருவதாக கூறப்படுகிறது.