செய்திகள்

தென்னாபிரிக்காவில் புலிகள் பயிற்சி முகாம் இருந்ததா? இலங்கை அரச தரப்பு கேள்வி

இலங்கையில் போர் முடிவிற்கு வந்து ஒரு வருடத்திற்கு பின்னர் மே 2010 இல் விடுதலைப் புலிகள் தென்னாபிரிக்காவில் பயிற்சி முகாமொன்றை நடத்தினார்களா என்பது குறித்து இலங்கை அரசாங்கம் தென்னாபிரிக்க புலனாய்வுப் பிரிவிடம் கேட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவுஸ்திரேலியா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் அந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டதாகவும் இலங்கை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள தென்னாபிரிக்க புலனாய்வு பிரிவினர் தங்களால் இந்த தகவல்களை உறுதிப்படுத்த முடியவில்லை, 1998 லிருந்து இவ்வாறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

அல் ஜசீராவிற்கு வழங்கப்பட்டுள்ள உலக நாடுகளின் புலனாய்வு அமைப்புகளின் இரகசிய தகவல்கள் அடங்கிய ஆவணங்களில் இந்த விடயமும் இடம்பெற்றுள்ளது.