செய்திகள்

தென்னாபிரிக்கா முதலிடம்

கேப் டவுனில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்டில் மேற்கிந்திய அணியை 8 விக்கெட்களால் வீழ்த்தி தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளதன் மூலமாக தென்னாபிரிக்கா டெஸ்ட் தரவரிசையில் முதலாவது இடத்தை பெற்றுள்ளது.
மேற்கிந்திய அணியை அதன் இரண்டாவது இனிங்சில் 215 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்கச்செய்த தென்னாபிரிக்கா வெற்றிக்கு தேவையான 115 ஓட்டங்களை இரண்டு விக்கெட்களை மாத்திரம் இழந்து பெற்றுக்கொண்டதன் மூலமாக தொடரை கைப்பற்றியது.
தென்னாபிரிக்கா சார்பில் அறிமுக சுழற்பந்துவீச்சாளர் ஹார்மெர் இரு இனிங்ஸ்களிலுமாக ஏழு விக்கெட்களை வீழ்த்தினார்.