செய்திகள்

தென்னாபிரிக்க பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் டொனால்ட் இராஜினாமா

தென்னாபிரிக்காவின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக பணியாற்றி வந்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அலன்டொனால்ட் இராஜினாமா செய்துள்ளார்.2015 உலககோப்பையுடன் அவரது ஓப்பந்தகாலம் முடிவடைகின்ற நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளிhகியுள்ளது.
உலககோப்பை வரையிலும் நான் தொடரவிரும்பினேன்,பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலகுவதற்கு இதுவே சரியான தருணம் என நான் கருதுகிறேன்,நான்கு வருடங்களும் அற்புதமானவை என அவர் தெரிவித்துள்ளார்.
தென்னாபிரிக்காவின் தற்போதைய பந்துவீச்சாளர்கள் குழுவினரே தற்போது உலகில் தலைசிறந்தவர்கள்,டெஸ்ட் தரவரிசiயில் முதலாவதாக வந்தமையே இந்த நான்கு வருடங்களில் மிகசிறந்த விடயம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டொனால்ட் தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர்களை ஆக்ரோசமானவர்களாக மாற்றினார். ஆதனை பின்பற்றுமாறு செய்தார்.
அலன் டொனால்ட்டின் வழிகாட்டுதலின் கீழ் டெஸ்ட் போட்டிகளில் தென்னாபிரிக்க பந்துவீச்சாளர்கள் மிகச்சிறப்பானவர்களாக மிளிர்ந்தமை குறிப்பிடத்தக்கது.