செய்திகள்

தென்னாபிரிக்க மத்தியஸ்தத்தை தமிழ்க் கூட்டமைப்பு ஏற்கும்; சுரேஷ்

இனப்பிரச்சினை தீர்வுக்கான பேச்சில் தென்னாபிரிக்கா மூன்றாம் தரப்பாக மத்தியஸ்தம் வகிப்பதை ஏற்க முடியும். அதேவேளை அவர்களுடனான சந்திப்பில் பேசியதற்கு அமைய செயற்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தென்னாபிரிக்காவின் மத்தியஸ்த்தம் தொடரும் என வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பாகக் கேள்வி எழுப்பிய போதே கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இதனைத் தெரிவித்தார்.