செய்திகள்

தென்னாபிரிக்காவில் வெளிநாட்டவர்கள் மீது தாக்குதல்கள் தொடர்வதால் பதட்டம்

குடியேற்றவாசிகளுக்கு எதிரான தாக்குதல்களை கண்டித்து ஆயிரக்கணக்கானவாகள் தென்னா ஆபிரிக்காவில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர்.
முன்னதாக ஜொகானஸ்பேர்க்கில் குடியேற்றவாசிகளுக்கு எதிராக நடைபெற்ற தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டதை தொடர்ந்தே அந்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
நள்ளிரவில் வெளிநாட்டவர்களின் கடைகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.மக்களை அமைதியாகயிருக்குமாறு வேண்டுகோள்விடுத்துள்ள பொலிஸார் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் இந்த வன்முறைகள் பலவலாம் என அச்சம் வெளியிட்டுள்ளனர்.
கடந்த இரு வாரங்களாக டேர்பனில் உள்ள பல ஆபிரிக்கா நாட்டவர்களினது கடைகளும் வீடுகளும் சேதமாக்கப்பட்டுள்ளன. அச்சம் காரணமாக பலர் வெளியேறி முகாம்களில் அடைக்கலம் புகுந்துள்ளனர்.
இவ்வாறான வன்முறையில் திங்கட்கிழமை 14 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
இதனை தொடர்ந்தே குடியேற்றவாசிகளுக்கு எதிரான தாக்குதல்;களுக்கு எதிர்ப்ர் தெரிவத்து ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.