செய்திகள்

தென் ஆப்பிரிக்காவிற்கே அதிக வாய்ப்பு: வங்காள தேச அணி பயிற்சியாளர் சொல்கிறார்

தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி வங்காள தேசத்தில் சுற்றுப்பயணம் செய்துள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.
இந்நிலையில் வங்காள தேசத்திற்கு எதிரான தொடரில் தென்ஆப்பிரிக்காவிற்குதான் அதிக வாய்ப்பு இருப்பதாக வங்காள தேச அணியின் பயிற்சியாளர் சந்திகா ஹதுருசிங்கா கூறினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘வங்காள தேச அணி தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக எப்பொழுதும் சிறப்பாக செயல்பட்டது கிடையாது. தென்ஆப்பிரிக்கா அணியிடம் 24 முறை மோதி உள்ளது. இதில் ஒரேயொரு முறைதான் வங்காள தேசம் வெற்றி பெற்றுள்ளது. அந்த வெற்றி 2007-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியின் சூப்பர்-8 சுற்றில் கிடைத்தது.
தென்ஆப்பிரிக்கா அணி நீண்ட காலமாக எல்லா வகை கிரிக்கெட்டிலும் சாதித்து வருகிறது. என்னுடைய கணிப்பின்படி இந்த தொடரில் தென்ஆப்பிரிக்காவிற்குதான் அதிக வாய்ப்பு. இருந்தாலும், ஒருநாள் தொடரில் தென்ஆப்பிரிக்காவின் வெற்றியை தடுத்து நிறுத்த வங்காளதேச அணியால் முடியும் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.