செய்திகள்

தென் கொரியாவில் அமெரிக்க தூதரை கத்தியால் பதம்பார்த்த கொரிய தேசியவாதி

தென் கொரியாவுக்கான அமெரிக்க தூதுவர் மார்க் லிப்பெர்ட் இன்று அந்நாட்டின் தலைநகர் சியோலில் காலை உணவு கலந்துரையாடல் ஒன்றின்போது கொரிய தேசியவாதி ஒருவரினால் முகத்தில் கத்திக் குத்துக்கு இலக்காகி படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

இதன்போது இவரது கையிலும் காயம் ஏற்பட்டது. கொரியாவின் தேசிய உடை அணிந்த கிம் கி ஜொங் என்ற 55 வயது தேசிய செயற்பாட்டாளரே திடீரென மார்க் லிப்பெர்ட் மீது பழங்களை நறுக்க பயன்படுத்தப்படும் கத்தி ஒன்றை பயன்படுத்தி இந்த தாக்குதலை நடத்தினார்.

வட கொரியாவும் தென் கொரியாவும் மீளவும் இணைக்கப்படவேண்டும் என்றும் அமெரிக்க – தென் கொரிய இராணுவ பயிற்சிகளை எதிர்த்தும் கோஷங்களை எழுப்பியவாறு கிம் கி ஜொங் தனது கத்தியை பயன்படுத்தி முதலில் மார்க் லிப்பெர்ட்டின் முகத்தில் குத்திவிட்டு பின்னர் அவரது மணிக்கட்டிலும் குத்துவதற்கு முயற்சித்தபோது தனது கதிரையில் இருந்தபடியே மார்க் லிப்பெர்ட் போராடினார். இதற்கிடையில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கிம் கி ஜொங்கை மடக்கிப் பிடித்து விட்டனர். இருந்தபோதிலும் மார்க் லிப்பெர்ட்டின் முகத்திலும் கையிலும் பெரும் காயம் ஏற்ப்பட்டு இரத்தம் வழிந்தோடியது. இரத்தம் வழிய வழிய அவர் அந்த இடந்தை விட்டு வெளியேறும் காட்சிகளும் உத்தியோகத்தர்கள் பதற்றத்துடன் அவர் பின்னால் ஓடுவதுமான காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மார்க் லிப்பெர்டுக்கு சுமார் ஒன்றரை மணிநேரம் சத்திரசிகிற்சை நடைபெற்றதாகவும் அவரது கையில் ஏற்பட்ட காயம் காரணமாக நரம்புகள் பாதிக்கப்பட்டிருந்தபோதிலும் அவை சரி செய்யப்பட்டுள்ளதாகவும் 80 தையல்கள் போடப்பட்டுள்ளதாகவும் வைத்தியர்கள் தெரிவித்தனர்.

இதேவளை, இந்த தாக்குதல் குறித்து கருத்து வெளியிட்டுள்ள வட கொரியா அமெரிக்க யுத்த வெறியர்களுக்கான ஒரு தகுந்த பாடம் என்றும் நீதியின் கத்திக் குளியல் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. பதிலுக்கு, அமெரிக்காவின் எந்த ராஜதந்திரிகளையும் எவரும் காயப்படுத்தி அமெரிக்காவை பயமுறுத்தவோ பின்வாங்கவோ செய்யமுடியாது என்று அமெரிக்க ராஜாங்க அமைச்சர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார்.

[youtube url=” https://www.youtube.com/watch?v=tH1sfiXxSys” width=”500″ height=”300″]

[youtube url=” https://www.youtube.com/watch?v=Ac2ZeoFxVJc” width=”500″ height=”300″]

1 2 3 4