செய்திகள்

தென் சீனா கடலில் அமெரிக்க வேவு விமானம் பறந்தமை குறித்து அமெரிக்காவிடம் முறைப்பாடு

சர்ச்சைக்குரிய தென் சீனா கடற்பகுதியூடாக அமெரிக்காவின் வேவு விமானம் பறந்த சம்பவம் குறித்து சீனா அமெரிக்காவிடம் உத்தியோகபூர்வமாக முறைப்பாட்டை தெரிவித்துள்ளது.
சீனா அமெரிக்காவிடம் தனது கடும் ஆட்சேபத்தை தெரிவித்துள்ளது,அமெரிக்காவின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை அது எதிர்க்கின்றது என சீனாவின் வெளிவிவகார பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நாங்கள் அமெரிக்காவை தனது தவறுகளை திருத்துமாறும்,புத்திசாலித்தனமாக செயற்படுமாறும்,பொறுப்பற்ற செயல்கள் மற்றும் வாத்தைகளை நிறுத்துமாறும் கேட்டுக்கொள்கிறோம், என அவர் தெரிவித்துள்ளார்.
தென் சீனக் கடலில் உள்ள ஸ்ப்ராட்லி தீவுகள் பகுதியில் பெரும் அளவில் மண்ணை நிரப்பி புதிதாகப் பெரிய தீவு ஒன்றை சீனா உருவாக்கி வருகிறது. விமானதளம் அமைக்கும் விதத்தில் அந்தத்தீவு உருவாக்கப்பட்டு வருவதாக பல நாடுகள் சீனாவை விமர்சித்து வரும் நிலையில் அந்த தீவுக்கு மேல் பறந்த அமெரிக்க உளவு விமானத்தின் பைலட்டை சீன கடற்படை 8 முறை வெளியேறச் சொன்னதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

அமெரிக்க ராணுவத்தின் அதி நவீன கண்காணிப்பு விமானமானம் அதன் குறைந்த பட்ச உயரமான 4 ஆயிரத்து 500 மீட்டர் உயரத்தில் அந்த தீவுப் பகுதியில் பறந்த படி இருந்ததாகவும், ஒரு கட்டத்தில் இந்த விமானம் சர்வதேச வான்பகுதியில் இருந்த வருவதாக அமெரிக்க விமானவோட்டி கூற அவருடன் ரேடியோவில் பேசிய சீன அதிகாரி ஆத்திரத்துடன் இது சீன கடற்படை. நீங்கள் போகலாம்” என்று 8 முறை கூறியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

சமீபத்தில் இதே பகுதியில் பிலிப்பைன்ஸ் ராணுவ விமானங்கள் பறக்க கூடாது என்று சீனக் கடற்படை எச்சரித்தது நினைவு கூரத்தக்கது.

வியட்னாமிற்குக் கிழக்கே தென் சீனக் கடலில் அமைந்துள்ள ஸ்ப்ராட்லி தீவுக் கூட்டத்துக்கு சீனா வியட்நாம் தைவான் பிலிப்பைன்ஸ்
மலேசியா புருணை சொந்தம் கொண்டாடி வருகின்றன.