செய்திகள்

‘தெறி’ படத்தை வெளியிடாத திரையரங்குகளை புறக்கணிக்க தயாரிப்பாளர் சங்கம் முடிவு

செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் தெறி திரைப்படத்தை வெளியிடாத திரையரங்குகள் இனி புறக்கணிக்கப்படும் என தயாரிப்பாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு, விநியோகஸ்தர்களுடன் ஏற்பட்ட பிரச்சனையால் செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் 60 திரையரங்குகளில் தெறி திரைப்படம் திரையிடப்படப்படவில்லை என தெரிவித்தார்.

இந்த திரையிரங்குகள் மீது தயாரிப்பாளர் சங்கம் சார்பில் கண்டனம் தெரிவித்துக்கொள்வதாக தயாரிப்பாளர் சங்க தலைவர் தாணு கூறினார். தொடர்ந்து பேசிய தயாரிப்பாளர் சங்க துணைத்தலைவர் சிவா, திரையரங்குகளை தயாரிப்பாளர் சங்கம் புறக்கணிப்பதாகவும் இனி வரும் காலங்களில் திரைப்படத்தை வழங்கப்போவதில்லை என்று தெரிவித்தார்.

N5