செய்திகள்

‘தெறி’ பாகம் 2 இன் கதை தயார் !

விஜய், சமந்தா, எமி ஜாக்ஸன், மீனா மகள் நைனிகா நடித்து தற்போது திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ‘தெறி’. அட்லி இயக்கம், கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பு. ஜி.வி.பிரகாஷ்குமார் இசை. என திரைப்படமே ஒரு பெரும் மார்க்கெட் உள்ள கூட்டணியிhல் உருவானது.

இப்படம் பற்றி அட்லி கூறும் போது ‘நம் குடும்பத்தில் அண்ணனோ, தம்பியோ போலீஸ் அதிகாரியாக இருந்தால் அவரை குடும்பத்தினர் எப்படி பார்ப்பார்கள் அதே போலீசை சமுதாயத்தில் உள்ளவர்கள் அண்ணன், தம்பியாக பார்த்தால் எப்படிப்பட்ட சூழல் நிலவும் என்பதை கருவாக கொண்ட கதை.

ஒன்றுக்கு மேற்பட்ட வேடத்தில் விஜய் நடித்திருக்கிறார். டாக்டராக சமந்தா, மலையாள ஆங்கிலோ இண்டியன் டீச்சராக எமி நடிக்கின்றனர். மீனா மகள் நைனிகா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார்.

விஜய் மகள் நடிக்கிறாரா என்கிறார்கள். அது சஸ்பென்ஸ். ‘தெறி’ ஆடியோ போன்ற நிகழ்ச்சிகளுக்கு சமந்தா வரவில்லையே என்கிறார்கள். இதைதான் அவரிடம் நானும் கேட்டுவருகிறேன். ஆனால் தெலுங்கில் நடந்த தெறி ஆடியோ விழாவில் சமந்தா பங்கேற்றார்.

இப்படத்தின் 2ம் பாகம் வருமா என்கிறார்கள். அதற்கான கதை ரெடியாக இருக்கிறது. மக்கள் தரும் வரவேற்பை பொறுத்து பார்ட் 2 இயக்குவது முடிவாகும். இயக்குனர் மகேந்திரன் இதில் வில்லனாக அறிமுகமாகிறார். இந்த கதாபாத்திரத்தில் நடிக்க கேட்ட போது முழுமனதுடன் ஒப்புக்கொண்டார்’ இவ்வாறு அட்லி கூறினார்.

N5