செய்திகள்

தெற்கு அதிவேக வீதியில் சென்ற பஸ்வண்டிகள் மீது கல்வீச்சு

தெற்கு அதிவேகப் பாதையில் பயணித்த 3 பஸ் வண்டிகள் மீது கல்வீச்சு தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொட்டாவையிலிருந்து மாத்தறை நோக்கிச் சென்ற பஸ்வண்டிகள் மீதே தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை மில்லனிய பிரதேசத்தில் வைத்து இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்தக் கல்வீச்சு சம்பவத்தினை அடுத்து தெற்கு அதிவேகப் பாதையில் பயணிக்கும் பஸ் வண்டிகளின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அற்ற நிலைக் காணப்படுவதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

N5