செய்திகள்

தெற்கு சூடானில் 2.5 லட்சம் குழந்தைகள் பட்டினியால் வாடுகின்றனர்: ஐ.நா. அதிர்ச்சி தகவல்

உள்நாட்டு போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆப்ரிக்க நாடான தெற்கு சூடானில் 2.5 லட்சம் குழந்தைகள் பட்டினியால் வாடுகின்றனர் என அதிர்ச்சியான தகவலை ஐ.நா. வெளியிட்டுள்ளது.

நேற்று ஐ.நா. வெளியிட்டுள்ள தகவலின் படி “கடந்த 18 மாதங்களாக மோசமான உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்டுள்ள சூடானில் மூன்றில் ஒரு குழந்தை தீவிரமான ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்நாட்டில் சுமார் 2.5 லட்சம் குழந்தைகள் போதிய உணவு கிடைக்காமல் பட்டினியால் வாடுகின்றனர் என்றும் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் உதவியை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் ஐ.நா. தெரிவித்துள்ளது.

மேலும் 4.5 மில்லியன் மக்கள் உணவு பற்றாக்குறையால் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளனர். இவர்களுக்கு உதவ மொத்தமாக 1.63 பில்லியன் டாலர் நிதியுதவி தேவைப்படுகிறது. இந்த நிதிக்காக நன்கொடையாளர்களை எதிர்நோக்கியுள்ளோம்” என கூறியுள்ள ஐ.நா. அங்கு உணவு, மருந்து பொருட்கள் என சுமார் 113 மில்லியன் டாலர் மதிப்புள்ள மனிதாபிமான உதவிகளை செய்துள்ளது