தெல்லிப்பளையில் அமரர் சிவமகாராஜா உருவச்சிலை திறந்துவைப்பு
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், யாழ். தெல்லிப்பளை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் முன்னைநாள் தலைவருமான அமரர் சின்னத்தம்பி சிவமகாராஜா அவர்களின் பத்தாவது ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு அன்னாரது உருவச்சிலை தெல்லிப்பளை பலநோக்குக் கூட்டுறவுச் சங்க வளாகத்தில் சனிக்கிழமை தமிழரசுக் கட்சியின் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
தெல்லிப்பளை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தற்போதைய தலைவர் உமாகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், வட மாகாண விவசாய அமைச்சர் பொன்னத்துரை ஐங்கரநேசன்,
வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், தெல்லிப்பளை துர்க்காதேவி ஆலயத்த்தின் தலைவர் ஆறுதிருமுருகன், யாழ். பல்கலைக்கழக முன்னைநாள் உபவேந்தர் சண்முகலிங்கம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
R-06