செய்திகள்

தெல்லிப்பழையில் வீட்டிலுள்ள ஆட்களில்லா வேளை கதவுடைத்து 12 பவுண் நகைகள் பணம் கொள்ளை

வீட்டிலுள்ள அனைவரும் உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் சென்ற வேளை வீட்டின் முன்கதவினையுடைத்து உள்நுழைந்த திருடர்கள் 12 பவுண் நகைகள் மற்றும் 23 ஆயிரம் ரூபா பணம் என்பவற்றைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.இந்தக் கொள்ளைச் சம்பவம் நேற்று முன்தினம் 7 ஆம் திகதி சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் குற்றத்தடுப்புப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்.நகர் நிருபர்-