செய்திகள்

தெஹிவளை தனியார் வங்கியில் ரூ. 20 இலட்சம் கொள்ளை

தெஹிவளை, அத்திடிய பகுதியிலுள்ள தனியார் வங்கியொன்றில் ஆயுதமு னையில் 20 இலட்சம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று நண்பகல் 1.45 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முகம் மூடிய தலைக்கவசம் அணிந்த இருவரே இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். வங்கி பாதுகாப்பு அதிகாரிகளை தாக்கிவிட்டு வங்கியினுள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட பின்னரே பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. காயமடைந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட் டுள்ளார்.