செய்திகள்

தேசப்பற்றுள்ள தேசிய முன்னணியில் களமிறங்குகிறார் மகிந்த

தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி (தேசபிரேமி ஜாதிக பெரமுன) என்ற கட்சியில் பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் தேர்தலில் களமிறங்கப் போவதாக நம்பகரமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த கட்சியின் செயலாளாராக பியசிறி விஜயநாயக்க இருக்கிறார்.

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிடமிருந்து பிரிந்து சென்று இவர் இந்த கட்சியை ஆரம்பித்தார்.  இக்கட்சியின் பெயர் பெரும்பான்மையின வாக்குகளை குவிக்கும் என்பது மஹிந்த தரப்பு நம்பிக்கை