செய்திகள்

தேசியப் பட்டியலின் ஊடாக நாடாளுமன்றம் செல்ல முயற்சிப்பதாக வெளியான செய்தி பொய்: கோத்தபாய (வீடியோ)

-தேசியப் பட்டியலின் ஊடாக நாடாளுமன்றம் செல்ல முயற்சிப்பதாக அண்மையில் ஊடகங்களில் வெளியான செய்தியை கோத்தபாய ராஜபக்ச மறுத்துள்ளார்.

கண்டியில் நேற்று சமய நிகழ்வொன்றில் கலந்து கொள்ள சென்ற சந்தர்ப்பத்தில் ஊடகவியலாளர்களிடம்  அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கோத்தபாய ராஜபக்ச தேசியப் பட்டியலின் மூலம் நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிக்க முற்படுவதாக, அண்மையில் இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின் இலங்கையில், அவரது சகோதரரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்சவின் ஆட்சி அமையுமாக இருந்தால், கோத்தபாய ராஜபக்ச தேசியப் பட்டியலில் மூலம் நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிக்‍க வாய்ப்பிருப்பதாக அந்த ஊடகம் சுட்டிக்காட்டியிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

[youtube url=”https://www.youtube.com/watch?v=M1W5Wg8Os9s&feature=youtu.be” width=”500″ height=”300″]

[youtube url=”https://www.youtube.com/watch?v=Ck7u6vBeMXE&feature=youtu.be” width=”500″ height=”300″]

[youtube url=”https://www.youtube.com/watch?v=WX1-Cg4hyF4&feature=youtu.be” width=”500″ height=”300″]