செய்திகள்

தேசியமட்ட வலைப்பந்தாட்டப் போட்டிக்குத் தெரிவான யாழ் வீராங்கனைகளுக்கு சப்பாத்துக்களை வழங்கிய கஜதீபன் (படங்கள்)

தேசியமட்ட வலைப்பந்தாட்ட போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்ட யாழ்ப்பாணம் அராலி சரஸ்வதி மகாவித்தியாலய வீராங்கனைகளைக் கௌரவித்துச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு அண்மையில் பாடசாலையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் தேசிய மட்ட விளையாட்டுப் போட்டிக்குத் தெரிவாகிய மாணவர்கள் பாடசாலை சமூகத்தினரால் சான்றிதழ் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்வில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.

அத்துடன் தனது 2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட நிதியிலிருந்து தேசியமட்ட வலைப்பந்தாட்டப் போட்டிக்குத் தெரிவாகிய மாணவிகளுக்குத் தேவையான சுமார் 35 ஆயிரம் ரூபா பெறுமதியான காலணிகளையும் வழங்கி வைத்தார்.

11027126_1590517427854056_1050637054477463113_n

11083654_1590517084520757_1438327385703205768_n