செய்திகள்

தேசிய அரசாங்கத்தை சுதந்திரக்கட்சி நிபந்தனையுடன் ஏற்பதாக அறிவிப்பு

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தேசிய அரசாங்கத்தை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஏற்கிறது. அந்த அரசாங்கத்தில் நாம் பங்கேற்போம் என கட்சியின் மூத்த அரசியல்வாதியும் எதிக்கட்சியின் தலைவருமான நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

இன்று கட்சியின் தலைமையலுவலகத்தில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால தலைமையிலான தேசிய அரசாங்கத்தில் இணையவே சுதந்திரக்கட்சி விரும்புகிறதே தவிர ரணில் தலைமையிலான அரசில் அல்ல என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த நிபந்தனையின் படி நாம் அடுத்த அரசில் இணைவோம் என்றார்.