செய்திகள்

தேசிய அரசாங்கம் அமைக்க ஐ.தே.க. – ஶ்ரீல.சு.க. இணக்கம்: அமைச்சர்களின் 45 ஆக அதிகரிக்கும்

பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்கு முன்னர் தேசிய அர­சாங்கம் ஒன்றை அமைப்­பது தொடர்பில் தீவி­ர­மாக ஆராய்ந்­துள்ள ஸ்ரீ­லங்கா சுதந்­திரக்கட்சி தேசிய இவ்விடயத்தில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட இணங்கியிருக்கின்றது.

தேசிய அர­சாங்­கம் அமைக்கப்படும் நிலையில் அமைச்­சர்­களின் எண்­ணிக்கை 45 ஆக அமை­ய­வேண்டும் என்றும் அதில் 17 அமைச்­சுக்கள் சுதந்­திரக் கட்­சிக்கு வழங்­கப்­ப­ட­வேண்டும் என்றும் யோச­னைகள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.

அத்­துடன் சில நிபந்­த­னை­களின் பிர­காரம் புதிய அர­சாங்­கத்தின் அர­சி­ய­ல­மைப்பு திருத்­தங்­க­ளுக்கு ஆத­ரவு வழங்­கவும் சுதந்­திரக் கட்சி மட்­டத்தில் தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது. அதா­வது நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறைமை மாற்­றப்­ப­டும்­போது தேர்தல் முறையும் மாற்­றப்­ப­ட­வேண்டும் என்­பதே சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் நிலைப்­பா­டாக உள்­ளது.

சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறு­ப­பி­னர்கள் கலந்­து­கொண்ட இரண்டு நாள் அமர்வு கட்­டு­நா­யக்க ஹோட்டல் ஒன்றில் கடந்த சனிக்­கி­ழமை மற்றும் ஞாயிற்­றுக்­கி­ழமை ஆகிய தினங்­களில் நடை­பெற்­றுள்­ளது. இந்த கருத்­த­ரங்­கி­லேயே குறித்த விட­யங்கள் ஆழ­மாக ஆரா­யப்­பட்­ட­துடன் சில இணக்­கப்­பா­டு­களும் எட்­டப்­பட்­டுள்­ளன.

“இந்தக் கருத்­த­ரங்கில் பல்­வேறு விட­யங்கள் குறித்து ஆரா­யப்­பட்­டது. 2016 ஆம் ஆண்டு வரை தேர்­தலை நடத்­தாமல் தேசிய அர­சாங்­கத்தை அமைப்­பது குறித்தும் ஆரா­யப்­பட்­டது. ஆனால் எந்த விடயம் குறித்தும் இறுதி தீர்­மானம் எடுக்­கப்­ப­ட­வில்லை” என்று கூட்­டத்தில் கலந்­து­கொண்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மற்றும் முன்னாள் பிர­பல அமைச்சர் ஒருவர் தெரி­வித்தார்.

ஐக்­கிய தேசிய கட்­சியும் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியும் இணைந்து தேசிய அர­சாகங்ம் அமைக்­கு­மாயின் பாரா­ளு­மன்றத் தேர்தல் இவ்­வ­ருடம் நடை­பெ­றாது என்றும் 2016 ஆம் ஆண்டே தேர்தல் நடை­பெ­றலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.